Newskadai.com
அரசியல்

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

Congress
Share this:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வியை அடுத்து ராகுல் காந்தி அகில இந்திய கங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்காலிக தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், வயது மூப்பு காரணமாக அவரால் சரியாக செயல்பட முடியவில்லை எனக்கூறி காங்கிரஸில் சலசலப்பு உருவாகியது.

 

Congress

 

இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தலைவர் தேவை என குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 மூத்த நிர்வாகிகள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலமாக காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சோனியா காந்தி, தனக்கு இனியும் இடைக்கால தலைவராக பதவி வகிக்க ஆர்வம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஒரு சாரார் காந்தி குடும்பம் இல்லாத தலைவரை கொண்டு வர முயற்சிக்கும் அதே வேளையில், பெரும்பாலானோர் சோனியா அல்லது ராகுல் மட்டுமே தலைவர் பொறுப்பை வசிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

Congress

மேலும் படிக்க: http://ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சோனியாவுக்கு எதிராக கடிதம் எழுதிய அனைவரும் பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்ற பகீர் குற்றச்சாட்டை ஓபனாக முன் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி கட்சி நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் போது அந்த கடிதத்தில் உள்ள தகவல்களை பொது வெளியில் வெளியிட்டது ஏன்? என்றும், தலைமை மாற்றம் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் எழுதிய கடிதத்திற்கு பின்னால் பாஜக மறைந்திருப்பதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மூத்த நிர்வாகிகளை நிலைகுலைய வைத்துள்ளார்.


Share this:

Related posts

நாளை ஒத்திவைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை… மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு…!!

NEWSKADAI

அய்யய்யோ 1000 கோடியை ஆட்டையைப் போட்ட இடைத்தரகர்கள்… பிரதமரை அலர்ட் செய்யும் தமிழக எம்.பி…!

AMARA

“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

AMARA

திருத்தணியில் போலீசார் குவிப்பு : தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை..!!!

MANIMARAN M

பரபரப்பில் அதிமுக…. தனித்தனியே ஆதரவாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்…

MANIMARAN M

சசிகலாவிற்கு அடுத்த ஆப்பு… ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை…!

NEWSKADAI