Newskadai.com
இந்தியா

14 கோடி பேரின் வாழ்க்கை நாசமா போச்சு… இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி முடக்குகிறார்… கொதிக்கும் ராகுல் காந்தி…!!

Share this:

கொரோனா பரவல் அதிகரிப்பு, பொருளாதார பின்னடைவு, பி.எம்.கேர் நிதி எதிர்ப்பு, ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான எதிர்ப்பு, ஜிடிபி சரிவு என பல முனைகளிலிருந்தும் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆய்வறிக்கையை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவை என்ற தலைப்பில் 4 வீடியோக்களை வெளியிட்டு மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்தார்.

ஆனால், 6 ஆண்டுகளில் 12 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு பதிலாக, 14 கோடி பேரின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் தற்போது விழித்துக்கொண்டு, பதில் கேட்கிறார்கள்” எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் கொள்கைகள் தான், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழப்புக்கும், வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாாதார வீழ்ச்சியும் அடைந்துள்ளது என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசின் கொள்கைகள் நசுக்கிவிட்டன. அந்த இளைஞர்களின் குரல்களை மத்திய அரசு கேட்க வைக்கப்போம் என்றும், வேலைக்காக குரல் கொடுப்போம் எனும் பிரச்சாரத்தில் இணையுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

வெள்ளக்காடாய் மாறிய மருத்துவமனை… பாஜக அரசின் அலட்சியத்தால் தண்ணீரில் தத்தளிக்கும் நோயாளிகள்…!!

NEWSKADAI

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

நாய் கறிக்கு தடை : மாநில அரசு அதிரடி.

NEWSKADAI

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA

பற்றி எரியும் பெங்களூரு… துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு… பரபரப்பு காட்சிகள்…!!

MANIMARAN M