Newskadai.com
உலகம்

குட் நியூஸ்: வந்தாச்சு 2வது கொரோனா தடுப்பூசி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

epivaccorona vaccine
Share this:

கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி (Sputnik V) என்ற மருந்தை பயன்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா அனுமதியளித்தது. உலகின் முதல் தடுப்பூசி எனும் அங்கீகாரத்தை பெற்ற ஸ்பூட்னிக் V மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தாகும். ஸ்பூட்னிக் V தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

epivaccorona vaccine

இந்நிலையில் நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் கண்டுபிடித்துள்ள எபிவாகொரோனா(EpiVacCorona) என்ற தடுப்பூசி அதன் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தனது ஆரம்ப கட்ட மனித சோதனைகளை நிறைவு செய்தது எபிவாகொரோனா. இதன் அடுத்த கட்ட மனித பரிசோதனை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்றும் இதில் சுமார் 30,000 பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

epivaccorona vaccine

மேலும் படிக்க : கடலூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்… ஆற்றங்கரையோரத்தில் கிடந்த பைக்குள் காத்திருந்த அதிர்ச்சி…!!

இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது, “நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவாகொரோனா என்ற இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது. நாங்கள் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்போம். எங்களது வெளிநாட்டு கூட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம், வெளிநாட்டில் எங்களது கொரொனா தடுப்பூசியை ஊக்குவிப்போம்”. என்று அவர் கூறியுள்ளார்.


Share this:

Related posts

இந்தியாவுக்கு அனுப்பவே முடியாது – இங்கிலாந்து அரசு திட்டவட்டம்..!!

MANIMARAN M

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

60% வாக்குகளுடன் அமோக வெற்றி… இலங்கை தேர்தலில் ஜெயித்த ராஜபக்சே…!!

MANIMARAN M

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

கொட்டித் தீர்த்த பேய் மழையால் 28 பேர் உயிரிழந்த பரிதாபம்.. விடியோ…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை வைத்து ட்ரம்ப் போட்ட அதிரடி திட்டம்… தேர்தலை தள்ளிவைக்க போட்ட மாஸ்டர் பிளான்…!!

MANIMARAN M