Newskadai.com
சினிமா

எங்கள ஆள என்ன தகுதியிருக்கு?… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள முதல்ல… ஆவேசமான தங்கர் பச்சான்…!!

Share this:

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதுவும் கடந்த 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அதற்கு முதல் நாள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இதையடுத்து திரைத்துறையைப் பொறுத்தவரை நடிகர் சூர்யா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். அதில் கொரானா அச்சத்தால் உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என நீதிமன்றத்தை விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை தேவையில்லை என கூறியது. தற்போது வரை சூர்யாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகின்றன.

தற்போது அடுத்ததாக திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் தங்கர் பச்சன் நீட் தேர்வுக்கு எதிராக காரசாரமாக பேசியுள்ளார். பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், மாணவர்கள் தகுதியை நிர்ணயிக்க நீட் தேர்வு நடத்தப்படுகிறது என சொல்கிறார்கள். அப்படியானால் நாட்டை ஆளும் நீங்கள் மக்கள் மூலமாக எம்.எல்.ஏ, எம்.பி. என தேர்வு செய்யப்பட்டு அமைச்சர், பிரதமராகி நாட்டை ஆள்கிறீர்கள். நாட்டை ஆளும் உங்களுக்கு தேர்வு வைக்க வேண்டும்.

அதற்கான தேர்வை வச்சி, அதில் தேர்வான பிறகு நீங்கள் மாணவர்களுக்கு தேர்வு வைங்க. ஆளாளுக்கு காசு இருக்குன்னு கட்சி ஆரம்பிச்சி, டி.வி.வச்சிக்கிட்டு தேர்தலில் நின்னு உங்க ஆள் பலத்தால் ஓட்டு போட்டு ஜெயிச்சி, நாடாளுமன்றத்தில் போய் உட்கார்ந்து சட்டம் போடுறீங்க. இதில் எவ்வளவு குளபறுபடி இருக்கு. நாடாளுமன்றத்தில் 50 சதவீத உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கு அவங்க எல்லாம் ஓட்டு போட்டு, புதிய கல்வி கொள்கை நிறைவேற்றப்படுது. அது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this:

Related posts

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M

சிங்கமும், சிறுத்தையும் எதிர்த்தாச்சு… மற்ற நடிகர்கள் வாய் திறப்பார்களா?

NEWSKADAI

வைரல் பாட்டியை வலை வீசி தேடும் வில்லன் நடிகர்… மாஸ்டர் பிளானுடன் வெயிட்டிங்…!

NEWSKADAI

நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி… தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

AMARA

தளபதி விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்… சோகத்தில் கோலிவுட்

NEWSKADAI

அமைதியாக இருந்த அஜித்தையே சீண்டிவிட்டாங்களே… வெகுண்டெழுந்து வெளியிட்ட அதிரடி அறிக்கை…!

AMARA