Newskadai.com
அரசியல் இந்தியா

பாஜகவுக்கு அடுத்த ஆப்பு… கூட்டணியில் இருந்து விலகியது மற்றொரு கட்சி…!!

Share this:

கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நகமும் சதையும் போல அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலிதளம் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து ஏற்கனவே தெலுங்குதேசம் கட்சி, சிவசேனா கட்சி விலகியிருக்கும் நிலையில் 3-வதாக சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் விலகியுள்ளது. மத்திய பாஜ அரசு புதிய வேளாண் மசோதக்களை கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றியது.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பாஜக கூட்டணி கட்சி சிரோமணி அகாலிதளமும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையிலிருந்து அகாலி தளம் கட்சியின் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளான் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கூட்டணியிலிருந்து விலகிய அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் நிருபர்களிடம் கூறியதாவது, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப்பிலும் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மசோதாக்கள் விவசாயிகளை அழித்துவிடும். மத்திய அரசின் நிலைப்பாடு, பிடிவாதம், விவசாயிகளின் போராட்டம் ஆகியவை குறித்து அகாலி தளம் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று கூடி ஆலோசித்தது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலருந்து அகாலி தளம் விலகுவது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இறுதிவரை விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை, அதனால் இனிமேலும் பாஜக கூட்டணியில் நீடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை இல்லை… ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு…

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M

இந்தியாவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்… அரசு அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN