Newskadai.com
தமிழ்நாடு

சேலம் ஆவின் பால் பண்ணையால் சுற்றி இருப்பவர்களுக்கு வந்த சிக்கல்… போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

Aavin
Share this:

சேலம் மாவட்டம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டியில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. ஆவின் பால் பண்ணையில் மதிப்பு கூட்டப்பட்ட இயந்திரங்களை சுத்தம் செய்வதற்கு பல விதமான ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக பயன்படுத்தப்பட்ட ரசாயன கழிவு நீரை ஆவின் அலுவலகத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. தற்போது மழை நீருடன் கலந்து சராசரியாக 20 அடிக்கு மேல் கழிவு நீர் தேங்கி நின்றுள்ளது. இப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மழை நீருடன் ஆவின் கழிவுநீரையும் சேர்த்து திறந்து விடுவதை ஆவின்  பால் நிறுவனம் வழக்கமாக செய்து வருகிறது.

Aavin

இதனால் ஆவின் பால் பண்ணைக்கு பின்புறம் உள்ள, ரொட்டிக்கார வட்டம், நாகர்கோவில் வட்டம், நடையவட்டம்,காத்தவராயன் கோவில், மீன்வாயன் ஓடை ஆகிய  பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்குள் இந்த கழிவு நீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்களுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு  சிரம்பப்படுவதாகவும்,  அப்பகுதி முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் நெல், சோளம், ராகி உள்ளட்ட பயிர் வகைகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமென அப்பகுதியில் வாழும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திடீரென ஆவின் பால் பண்ணை நுழைவாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஆவில் பால் பண்ணையின் அதிகாரிகளை அழைத்து சென்று கழிவு நீர் வெளியேறும் இடங்களை பார்வையிட்டு இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதியளித்தனர் அதன் பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Share this:

Related posts

ஜலகையில் செஞ்சூரி அடித்த கொரோனா… தீயாய் பரவும் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி?

NEWSKADAI

தமிழக மக்களே உஷார்: 15 மாவட்டங்களை பதற வைக்கப்போகும் மழை…!!

THAVAMANI NATARAJAN

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சீலிடப்பட்ட கவரில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்…!!

MANIMARAN M

சேலத்தில் கொரோனாவால் 2 மகன்கள் பலி… சோகத்தில் உயிரிழந்த தாய்… ஒரே வீட்டில் 3 மரணம்…!

THAVAMANI NATARAJAN

ஒரு முறை தேர்ச்சி பெற்றாலே போதும்… TET தேர்வில் வரவிருக்கும் புதிய மாற்றம்…!

THAVAMANI NATARAJAN

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

NEWSKADAI