Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

Share this:

எனக்கு இந்தி தெரியும் என்று பலர் கூறிவருகின்றனர். நான் எந்த மேடையில்  இந்தியை மொழிப் பெயர்த்தேன், எப்பொழுது இந்தியில் பேசினேன்  என்று நிரூபியுங்கள் என்று திமுக எம்.பி.சவால் விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், தனக்கு இந்தி தெரியாததால், தான் ஒரு இந்தியரா? என்ற கேள்வியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கேட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார் எம்.பி.கனிமொழி.

இவருடைய பதிவை ஆதரித்து பல தலைவர்கள் கருத்து கூறினார்கள். பாஜகவைச் சார்ந்தவர்கள் கனிமொழிக்கு இந்தி தெரியும், அவர் அரசியல் உள் நோக்கத்தோடு செயல்படுகிறார் என்று கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் உயர் அதிகாரி, மொழி ரீதியாக யாருக்கும் எதிராக எங்கள் அதிகாரிகள் செயல்பட்டது கிடையாது . இனி விமான நிலையத்தில் பயணிகளுடன் நேரடி தொடர்பு பணியில் இருப்பவர்கள் உள்ளூர் மொழி தெரிந்தவர்களாக மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி, நான் பயின்ற பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது, இந்த இரு மொழிகள் மட்டும் தான் எனக்கு தெரியும்… எனக்கு இந்தி தெரியாது, நான் பல வருடங்களாக டெல்லிக்கு சென்று வந்திருந்த போதிலும் இந்தி கற்றுக்கொள்ளவில்லை.. தேவிலால் சென்னை வந்த போது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கவில்லை. தெரிந்தால் தானே மொழி பெயர்க்க முடியும்… நான் எந்த மேடையில் இந்தியில் பேசினேன், எப்பொழுது இந்தியை மொழிப் பெயர்த்தேன் என்று நிரூபியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.


Share this:

Related posts

திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியே தீருவர்… மு.க.ஸ்டாலினை தெறிக்கவிட்ட மு.க.அழகிரி…

MANIMARAN M

மக்களே மகிழ்ச்சியான செய்தி… ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் எப்போது கிடைக்கும் தெரியுமா?

AMARA

பெண்களே இனி கவலை வேண்டாம்… வந்தாச்சு புதிய கட்டுப்பாடுகள்…!

NEWSKADAI

கைவிட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை…

MANIMARAN M

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

MANIMARAN M

காதல் திருமணம்: மருமகனை ஆள் வைத்து அடித்துக்கொன்ற மாமனார் கைது…!!

THAVAMANI NATARAJAN