Newskadai.com
தமிழ்நாடு

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்திய மக்கள்… தீவிரமடையும் போராட்ட ‘தீ’!!

Share this:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். 8 வழிச் சாலை திட்டத்தால் செங்கம் தாலுக்காவில் சுமார் 30 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படும், இங்குள்ள விளைநிலங்கள், ஏரி, குளம், குடியிருப்புகள் என பலதும் பாதிப்புக்குள்ளாகும், எனவே 8 வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் மற்றும் சங்கர் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நேற்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தினால் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எந்த தரவுகளும் இல்லாமல் கூறியதை கண்டித்தும், எட்டு வழிசாலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள பொழுது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2025க்குள் எட்டு வழிச்சாலை அமைத்து முடிப்போம் என்று கூறியதை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

மேலும், மக்கள் அதிக அளவில் கூடும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து விட்டு கூட்டம் கூடி கிராம சபை நடத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் என்று கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ததை கண்டித்தும், சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட கோரியும் தீபந்தம் ஏந்தியும், கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Share this:

Related posts

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு…!!

AMARA

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN

ஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா?? காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

MANIMARAN M

அண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா?

MANIMARAN M

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

MANIMARAN M