Newskadai.com
தமிழ்நாடு

வேளாண் மசோதாவிற்கு எதிராக திரண்ட எதிர்க்கட்சிகள்… கிருஷ்ணகிரியில் போராட்டம்..!!

Share this:

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து இன்று போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடெங்கிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் காய்கறி மாலை அணிந்துக் கொண்டும், மண் சட்டிகளை தூக்கிக் கொண்டும், உடலில் பட்டை மற்றும் நாமம் போட்டுக் கொண்டும், புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்தும், எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், மசோதாவை ஆதரித்த விவசாயிகள் விரோத அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Share this:

Related posts

பெரம்பலூரும், தென்காசியும் விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாகும்… மற்ற மாவட்டங்களின் நிலை..?!

NEWSKADAI

பள்ளியில் பசுமை புரட்சி… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து…!!

NEWSKADAI

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

மோடி பிறந்த நாளில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… 13 பேர் மருத்துவமனையில் அனுமதி… வைரல் வீடியோ…!!

THAVAMANI NATARAJAN

மரணத்தில் முடிந்த “பர்த்டே” பார்ட்டி… மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

MANIMARAN M

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M