Newskadai.com
சினிமா

சிங்கமும், சிறுத்தையும் எதிர்த்தாச்சு… மற்ற நடிகர்கள் வாய் திறப்பார்களா?

Share this:

தென்னிந்தியா முழுவதும் பரவலான ரசிகர்களை பெற்றிருப்பவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இருவரும் திரைக்குப்பின்னால் சமூக சேவையிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். “அகரம் “அறக்கட்டளை மூலம் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவி வருகிறார் சூர்யா.

விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் பல்வேறு வகைகளில் உதவிட “உழவன் பவுண்டேஷன்” என்ற அமைப்பை ஏற்படுத்தி சமூக பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் நடிகர் கார்த்திக். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு சட்டத்தை எதிர்த்து தனது உழவன் பவுண்டேஷன் மூலம் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க:http://சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

அதன் சாரம்சங்கள்:


  • இப்பொழுது நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே நம் மக்களின் வாழ்வாதாரங்களையும் வளங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. இந்நிலையில் மத்திய அரசு தற்போது
    வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கிறது.
  • இயற்கை வளங்களை அழித்து தொழிற் சாலைகள் அமைப்பது நிச்சயம் வளர்ச்சி அல்ல.
  • இது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி.
  • நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி நாம் பேசவே முடியாது என்றால் இது எந்த வகையில் நியாயமான சட்டமாக இருக்கும்?
  • இந்தியா முழுமைக்குமான இந்த சட்டத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு அனைத்து மொழிகளிலும் இந்த சட்ட வரைவை வெளியிட வேண்டும்.
  • கொரோனா பாதிப்பில் நாடு போராடிக் கொண்டிருக்கும் போது இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?
  • அறிஞர்கள் ஆய்வாளர்கள் கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டும்.

மேலும் படிக்க:http://மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

suriya

இந்த அறிக்கையை இன்று ரீட்வீட் செய்த நடிகர் சூர்யா “பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழலை காக்க.. நம் மௌனம் கலைப்போம்”, என்று ட்விட்டரில் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.


Share this:

Related posts

விஷால் படத்திற்கு ஆப்பு… ஓடிடி ரிலீசுக்கு தடை போட்ட உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

“ஹிந்தி தெரியாது போடா”… கெத்தாக எதிர்ப்புகாட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள்..!!

MANIMARAN M

நீங்க நினைச்சால் அப்பாவை மீட்டுக்கொண்டு வரலாம்… கண் கலங்கிய எஸ்.பி.பி.சரண்…!!

AMARA

“10 லட்சம் குடும்பத்தை காப்பாத்துங்க”… முதல்வரிடம் கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்கள்…!!

NEWSKADAI

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… திரையுலகை அடுத்தடுத்து தாக்கும் அதிர்ச்சி

THAVAMANI NATARAJAN

சஞ்சய் தத்துக்கு இப்படியொரு நிலையா?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!

MANIMARAN M