Newskadai.com
தமிழ்நாடு

எச்சில் துப்பினால் 500… மாஸ்க் இல்லேன்னா 200… அதிரடியில் இறங்கிய போலீஸ்…

Share this:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற கட்டுபாடுகளை தமிழக அரசு வழிக்காட்டுதலாக அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மீறுபவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் அவசர சட்டம் ஒன்றினை கடந்த மாதம் பிறப்பித்தது தமிழக அரசு. அதன்படி தனி மனித இடைவெளி பின்பற்றாவிட்டால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும் என அந்த அவசர சட்டத்தில் வகுக்கப்பட்டன.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காவல் துறையினர் முகக்கவசம் அணியாத நபர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நேற்று நாமக்கல்லில் முகக்கவசம் அணியாமல் வந்த 445 நபர்கள் மீதும், பொது இடங்களில் எச்சியில் துப்பியதாக 14 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. விதியை மீறியவர்களிடமிருந்து மொத்தம் 95 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

சதுரங்க வேட்டை பாணியில் சீட்டு கம்பெனியின் சீட்டிங்… ஆயிரக்கணக்கானோர் கதறல்…!!

NEWSKADAI

குட் நியூஸ்: இனி ட்ராபிக் போலீசைப் பார்த்து ஓடி ஒளிய தேவையில்லை…!!

THAVAMANI NATARAJAN

திருமணமானதை மறைத்து மீண்டும் திருமணம் செய்தால் கடும் தண்டனை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!!

MANIMARAN M

அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு : நாளை முதல் கருப்பு பேஜ் போராட்டம்..!!!

THAVAMANI NATARAJAN

தொடரும் சதுரங்க வேட்டை : நான்கு மடங்கு தருவதாக ஆசையை தூண்டிவிட்டு நூதன மோசடி…!!

MANIMARAN M

மேட்டூரில் ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி… திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல்…!!

AMARA