Newskadai.com
இந்தியா

சாலையில் நடந்து செல்லவும் தடை… ராகுலைத் தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கைது…!

Share this:

கடந்த செப்டம்பர் 14ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான தலித் பெண் நான்கு பேரால் கடத்திக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மிகவும் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொண்ட அந்த கும்பல், அப்பெண்ணின் முதுகுத் தண்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் உள்ள எலும்புகளை அடித்து நொறுக்கியும், நாக்கை அறுத்தும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த பெண், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கார்கள் கிரேட்டர் நொய்டா பகுதிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தியும், பிரியங்காவும் ஹத்ராஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்படி சாலையில் நடந்து கொண்டிருக்கும் போதே ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நடைபயணத்தை தொடர்ந்த பிரியங்கா காந்தியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றதாக தேசிய கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this:

Related posts

நிறுத்தப்பட்டது 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி… பகீர் தகவலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி…!!

THAVAMANI NATARAJAN

மீண்டும் ஊரடங்கு : நவம்பர் 30 வரை நீட்டிக்க உத்தரவு..!!

THAVAMANI NATARAJAN

பயங்கரவாதிகள் – ராணுவத்தினர் இடையே கடும் மோதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

MANIMARAN M

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI

அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறப்பு… வெளியானது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

NEWSKADAI