Newskadai.com
தமிழ்நாடு

அதிர்ச்சியில் தனியார் மருத்துவமனைகள்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Private hospitals
Share this:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில தனியார் மருத்துவமனைகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா சிகிச்சை, பரிசோதனை, ஆம்புலன்ஸ் சேவை என அனைத்திற்கும் கட்டணங்கள் விதிக்கப்பட்டிருந்தாலும் வீதிமிறல்கள் அரங்கேறி வருகின்றன. ஒரு நாள் சிகிச்சைக்காக கொரோனா நோயாளிகளிடம் பல மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தனியார் மருத்துவமனைகளை மாநில அரசு தங்களுடைய கட்டுப்பாட்டி எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த பொதுநல மனுவில், கொரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

Private hospitals

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ரெம்டெசிவர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலில்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Share this:

Related posts

கொத்து கொத்தாய் செத்து மடியும் சேலம் மக்கள்… இன்று ஒரே நாளில் 10 பேர் பலி…!!

NEWSKADAI

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

ரூ.25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் – ஏன் தெரியுமா..?

MANIMARAN M

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI