Newskadai.com
தமிழ்நாடு

கொரோனாவின் கோரத் தாண்டவம் : தனியார் மருத்துவமனை மூடல்..!!

Share this:

நீலகிரி மாவட்டம் கூடாலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு மருத்துவர்களுக்கும் ஒரு செவிலியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனைக்குள் எவரும் அனுமதிக்கபடவில்லை. மேலும் சுகாதார பணியாளர்கள் அந்த மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர் அந்த தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்ட அந்த மூவரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சியைச் சேர்ந்த ஆத்தூர் கிராமத்திலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்த சிலரால் இந்த கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம், தற்போது இந்த கிராமத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Share this:

Related posts

கொட்டி தீர்த்த மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரிப்பு..!!!

THAVAMANI NATARAJAN

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை…. உற்சாக வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்..!!

AMARA

பற்றி எரிந்த சந்தேக‘தீ’… மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற ‘சைக்கோ’ கணவன்… கதவை உடைத்து காப்பாற்றிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

“இ பாஸ் தேவையா?”… தமிழக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மனித உரிமை ஆணையம்.

MANIMARAN M

நடத்தையில் சந்தேகம் : குடிகார கணவனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற இரண்டாவது மனைவி…

THAVAMANI NATARAJAN

”ரூ.20 இருந்தால் மட்டும் போதும்”… தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இதை வாங்கிக்கொள்ளலாம்…!

THAVAMANI NATARAJAN