Newskadai.com
தமிழ்நாடு

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

Share this:

கோவையில் இயங்கி வந்த தனியார் முதலீட்டு நிறுவனம் அதிக வட்டித் தருவதாகக் கூறி எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பல கோடிரூபாய் வசூல் செய்து ஏமாற்றியுள்ளது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டன் மற்றும் அவரது மகன் சஞ்சய் குமார் இருவரும் கிரீன் க்ரெஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிதி முதலீட்டு நிறுவனத்தை கடந்த இரண்டு வருடங்களாக கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி நகர் பகுதியில் நடத்தி வந்துள்ளனர்.

மேலும் படிக்க: http://தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தினமும் 0.5% வட்டித் தருவதாகவும், ஆள் சேர்த்து விடுபவர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதாகவும் ஆசைக்காட்டி கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள் மக்களிடம் முதலீடுகளைப் பெற்றுள்ளது. முதலீடு செய்பவர்களுக்கான வட்டியை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்த பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் பயன்படுத்தியுள்ளார் மணிகண்டன். இதில் முக்கியமாக, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பயன்படுத்தியுள்ளார்.

மணிகண்டன் மற்றும் அவர் மகன் சஞ்சய் குமார் ஆகியோரின் கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் சுமார் 8000-த்திற்கும் அதிகமானோர் இந்த நிறுவனத்தில் 50 ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் சில மாதங்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வட்டித் தொகை செலுத்தப்பட்டது என்று முதலீடு செய்தவர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் பல மாதங்களாக வட்டித் தொகை செலுத்தப்படாததினால் அது குறித்து அந்த நிறுவனத்திடம் கேட்கச் சென்ற அவர்களை அடியாட்கள் வைத்து மிரட்டியதாக கூறுகின்றனர்.

பண மோசடி புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் அவரது மகன் சஞ்சய் குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பலர் இந்த நிறுவனத்தில் சுமார் 60 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: http://பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தத்தளிக்கும் குடும்பத்தினர்…!!

இவர்கள் மீது 120பி, 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது மனைவி பத்மாவதி, மகள் சரண்யா மற்றும் அவரது நிறுவன கூட்டாளிகள் ஸ்ரீனிவாசன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை போலிசார் தேடி வருகின்றனர். விளம்பரத்திற்கு மணிகண்டன் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் உண்மை தன்மையையும் போலிசார் விசாரித்து வருகின்றனர் .


Share this:

Related posts

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு கத்திக்குத்து..!!!

THAVAMANI NATARAJAN

கட்டாய கட்டண வசூல் : 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டி… ரத்த வெள்ளத்தில் துடித்தவர் மருத்துவமனையில் அனுமதி….!!

NEWSKADAI