Newskadai.com
தமிழ்நாடு

நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது… தமிழக அரசின் உத்தரவால் பஸ் உரிமையாளர் அதிருப்தி…!

BUS
Share this:

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக 4ம் கட்ட தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இ-பாஸ் உள்ளிட்ட நடைமுறைகள் ரத்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நேற்று செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்கவும், மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டது. பொது போக்குவரத்து தொடங்கப்பட்டதை எண்ணி தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் அதிரடி அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BUS

நாளை முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர். மாவட்டந்தோறும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

BUS

மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும், ஒரு பேருந்தில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என்று அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கைவைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Share this:

Related posts

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

MANIMARAN M

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

சென்னையை அடுத்து கடலூரில் நடந்தேறிய பயங்கரம்…. குட்கா கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் பறிமுதல்…!!

THAVAMANI NATARAJAN

முனீஸ்வரருக்கு தானமாக இடமளித்த அப்துல் காதர்…..

MANIMARAN M