Newskadai.com
உலகம்

எகிறும் எதிர்பார்ப்பு… ஐ.நா பொதுக்கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை…!!

Share this:

ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு பொதுக் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது. சர்வதேச நாடுகளுக்கிடையே நல்லுறவு, பாதுகாப்பு அமைதி போன்ற அம்சங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. தற்போது இதில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா. பொதுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று விவாதம் நடத்தப்படும்.

கடந்த காலங்களில் ஒரு வார காலம் நடைபெற்று வந்த இந்த கூட்டம் இந்த வருடம் கொரோனா காரணமாக உலக தலைவர்கள் பங்கேற்க முடியாத சூழலில், ஐ.நா பொதுக் கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது. உறுப்பு நாடுகள் தங்கள் தலைவர்களின் உரையை 15 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோ பதிவு செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று தொடங்கும் இந்த நிகழ்வில் தலைவர்களின் வீடியோ உரையை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஒளிபரப்ப பட இருக்கிறது. இந்த விவாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

சீனாவுக்கு மட்டுமல்ல, சிவப்பிற்கே அமெரிக்காவில் அனுமதி இல்லை – டிரம்ப் அதிரடி

NEWSKADAI

வந்தாச்சு! வந்தாச்சு! கொரோனோ நோய்க்கு மருந்து உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…

MANIMARAN M

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

வெரிகுட் நியூஸ்: சிங்கிள் டோஸில் குணமாகும் கொரோனா… வந்தாச்சு பவர்ஃபுல் தடுப்பூசி..!!

MANIMARAN M

நண்பேண்டா – கோடிகளைக் கொட்டிக் கொடுத்த நட்பு.

NEWSKADAI