Newskadai.com
இந்தியா

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

Share this:

மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct taxes) நேரடி வரி விதிப்பில் பல முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. வரி செலுத்தும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு வரிசெலுத்தும் விண்ணப்பங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. வரி செலுத்தும் முறையில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வரி செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெருநிறுவனங்களின் வரி 8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக நேரடி வரிகள் வாரியம் “வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவித்தல்” என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்ந நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

  

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வரி செலுத்துவோர் மதிக்கப்படுவர் என்றும், வரி செலுத்தும் முறையில் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்த வெளிப்படையான கணக்கிடும் முறை வரும் 25ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும், இதனால் வரி செலுத்துவோர் மீதான அழுத்தங்களை குறைக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.


Share this:

Related posts

கஞ்சா கிடைக்காத கடுப்பில் போதை ஆசாமி செய்த காரியம்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் மருத்துவருக்கு காத்திருத்த அதிர்ச்சி…!!

NEWSKADAI

திருநங்கைகளை பாதுகாக்க தேசிய கவுன்சில் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

MANIMARAN M

“ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை இல்லை… ம.பி. முதல்வர் அதிரடி அறிவிப்பு…

MANIMARAN M

கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து..! மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி…

MANIMARAN M

இறுதி செமெஸ்டர் எழுதாமல் பட்டம் கிடையாது..!!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

MANIMARAN M