Newskadai.com
இந்தியா

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

Share this:

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி அவர்கள் அதற்கான அடிக்கல்லை நாட்டினார். இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து 1030 மணிக்கு லக்னோ சென்றடைந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக 11.30 மணிக்கு அயோத்தி சென்றடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக அயோத்தியில் விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற பிரதமர், முதலில் அனுமன் கர்கி கோயிலில் உள்ள ஹனுமானை தரிசித்தார்.

அதன் பின்னர் ராமர் பிறந்த இடமான ராம் ஜென் பூமியில் அடியெடுத்து வைத்த பிரதமர், அங்கிருந்த குழந்தை ராமருக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். அதன் பின்னர் அங்கு பாரிஜாத மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினார். அதனைத் தொடர்ந்து சரியாக 12.15 மணிக்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கியது. அங்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கான பட்டயம், செம்பு தகட்டிற்கு பூஜைகள் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் சரியாக 12.45 மணிக்க்கு 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கற்கலை நிறுவி கட்டுமான பணிக்கான அடிக்கலை நாட்டினார்.

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த விழாவில் பங்கேற்க 135 சாமியார்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விழாவில் பங்கேற்றனர்.

விழா மேடையில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மகந்த் நிருத்திய கோபால்தாஸ் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி அயோத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI

மத்திய கல்வி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்… 40% JEE தேர்வு மாணவர்களின் நிலை என்ன..?

MANIMARAN M

ஓடுதளத்தில் இரண்டாக உடைந்து விழுந்த விமானம்… கேரளாவில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு??

AMARA

என்னதான் உங்க பிரச்சனை…??? மத்திய அரசை கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

POONKUZHALI

அயோத்தி பூஜையன்று குரங்குகளுக்கு சிறப்பான கவனிப்பு… உ.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

NEWSKADAI

கோயிலுக்குள் நள்ளிரவில் நடந்த பயங்கரம்… 3 காவலாளிகளை கொடூரமாக கொன்ற கொள்ளை கும்பல்…!!

MANIMARAN M