Newskadai.com
இந்தியா

“மாணவர்கள் மன உளைச்சலுக்கு பெற்றோர்களே காரணம்”… பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு…!!

Share this:

என்.சி.இ.ஆர்.டி நடத்திய 21ம் நூற்றாண்டில் பள்ளிப் படிப்பு என்ற நிகழ்ச்சியில் காணொளி மூலம் கலந்து கொண்ட பிரதமர் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்றினார். அதில், “பல்வேறு அறிஞர்களின், சிந்தனையாளர்களின் பல ஆண்டுகால கடின உழைப்பில் உருவானதுதான் தேசிய கல்வி கொள்கை. புதிய கல்வி கொள்கை குறித்து இதுவரை 15 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இக்கருத்துகள் தேசிய கல்விக் கொள்கையை மேலும் செழுமைப்படுத்த உதவும்.

இந்திய மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்டுள்ள புதிய தேசிய கல்வி கொள்கை ஒரு ஆரம்பம் மட்டுமே இதுவே முடிவு அல்ல. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பள்ளியில் என்ன கற்றுக்கொண்டாய்? என்று தான் கேட்க வேண்டும். ஆனால் நாம் எல்லோரும் என்ன மதிப்பெண்களை பெற்று இருக்கிறாய் என்று தான் கேட்கிறோம். “மார்க் சீட்” என்பது குடும்பத்தினருக்கு கௌரவ அட்டையாக இருக்கலாம். ஆனால், அது மாணவர்களுக்கு நெருக்கடி தரும் அட்டையாக மாறிவிடக் கூடாது.” என்று தனது உரையில் தெரிவித்தார்.


Share this:

Related posts

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்யப்பட்ட “தேச விரோத பல்கலைக்கழகம்”…

MANIMARAN M

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் – பிரதமர் மோடி

MANIMARAN M

“இந்தியா கலாச்சாரத்தில் இருந்து இந்தியை நீக்கவே முடியாது”… மார்தட்டிக்கொள்ளும் அமித் ஷா, மோடி…!!

NEWSKADAI

சினிமா தாதாக்களை மிஞ்சும் ’தங்க கொரோனா மாஸ்க்’ தாதா…

NEWSKADAI

போலோ ஜெய் ஸ்ரீராம்.. போலோ மோடிஜி ஜிந்தாபாத்… அரங்கேறிய விபரீதம்…

MANIMARAN M