பாஜக தன்னை எதிர்க்க சரியான எதிர்க்கட்சிகள் இல்லாததால் தான் நினைக்கும் சட்டங்களை அதிரடியாக அமல்படுத்தி மத்திய அரசை மிகவும் செல்வாக்குடன் ஆண்டு வருகிறது. நூற்றாண்டு கண்ட அரசியல் கட்சி என்ற பெயர் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் நிலை மிகவும் பின்னடைவான நிலையை அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியினை வழிநடத்த சரியான தலைமையின்றி பரிதவிக்கும் நிலையை காண முடிகிறது. இந்த நிலையில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை ராகுல் காந்தி தொடர்ந்து தனது ட்விட்டரில் உடனுக்குடன் விமர்சனத்தை பதிவு செய்து வருகிறார்.

இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்கள் பாஜகவிற்கே ஆதரவாக செயல்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் அளித்துள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கம் மீதான பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தவறான தாக்குதலை சர்வதேச ஊடகங்கள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டின் விவகாரங்கள் போன்ற எவற்றிலும் யாரையும் தலையிட அனுமதிக்க முடியாது.
மேலும் தேசத்தின் பொருளாதாரத்தை அழிப்பது, ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தில் இருந்து ஆரம்பித்து மத்திய அரசு தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தவறான கொள்கைகளையே அறிமுகப்படுத்துகிறது. தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என ஆறு விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசைபடுத்தியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி கூறிய ஆறு பிரச்சனைகள்
- வரலாறு காணாத அளவு ஜிடிபி சரிவு (23.9 சதவீதம்).
- 12 கோடி பேர் வேலையை இழந்த சோகம்.
- 45 ஆண்டுகளில் இல்லாத வேலை வாய்ப்பின்மை.
- மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு தரவில்லை.
- சர்வதேச அளவில் அதிகப்படியான கோவிட்-19 தினசரி பாதிப்புகள்மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் காணப்படுகிறது.
- நமது நாட்டின் எல்லை பகுதிகளில் அண்டை நாடுகளில் அத்துமீறல் என்று ராகுல் காந்தி வரிசைப்படுத்தியுள்ளார்.