Newskadai.com
தமிழ்நாடு

முதுகலை பட்டப் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பம்.. அரசு அறிவிப்பு…

Online
Share this:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளது. 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பினை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு இன்று (10/10/2020) முதல் விண்ணப்பிக்கலாம்.

Students

இன்று முதல் அக்டோபர் 20- ஆம் தேதி வரை http://www.tngasapg.in http://www.tngasapg.org  என்ற இணையதளங்களில் பதிவு செய்யலாம். பதிவுக்கட்டணம் ரூபாய் 2, விண்ணப்ப கட்டணம் ரூபாய் 58 சேர்த்து ரூபாய் 60 ஆக மாணவ, மாணவிகள் செலுத்த வேண்டும். பட்டியலின விண்ணப்பத்தாரர்கள் பதிவுக்கட்டணம் ரூபாய் 2 மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்டோபர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 20- ஆம் தேதி வரை அட்டவணைப்படி பதிவேற்றலாம்’ என தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 044-22351014, 044-22351015, 044-28276791 என்ற எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அழைத்து வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

நாகை மீன்வள பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு…!!

MANIMARAN M

10வது படித்திருந்தாலே அரசு வேலை… ‘நாளை’ கடைசி நாள்… சீக்கிரம் முந்துங்கள்…!

NEWSKADAI

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

“குடும்பத்தை விட கடமையே முக்கியம்”… கொரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு ஜலகையில் வீரவணக்கம்…!

THAVAMANI NATARAJAN

மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட கொரோனா… இன்றைய நிலை..!!

NEWSKADAI