Newskadai.com
அரசியல்

மாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…!!

Share this:

தமிழகத்தின் பகுத்தறிவு பகலவனான தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாவிலும் #HBDPeriyar142, #HBDPeriyar142, #LandOfPeriyar, #பெரியார்142, #பெரியார், #LandOfPeriyar உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் பெரியார் பிறந்தநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து கூறி வருவதை காணலாம்…

மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17! சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம். மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்! சுயமரியாதைச் சுடர் வெல்க! – மு.க.ஸ்டாலின்

 

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைக்காக போராடிய, சுயமரியாதையை சொல்லித்தந்த சிற்பி, தந்தை பெரியார் அவர்களை அவரின் 142வது பிறந்த தினத்தில் போற்றி வணங்குகிறேன். –  எடப்பாடி பழனிசாமி

சமூக சீர்திருத்தச் செம்மல் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான இத்திருநாளில், தந்தை பெரியார் அவர்கள் வழியில் சமத்துவம் தழைத்தோங்கிட எந்நாளும் பாடுபடுவோம் என உறுதியேற்போம்! – ஒ.பன்னீர்செல்வம்.

பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! “பெரியாருக்கு முன்” “பெரியாருக்குப் பின்” என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர். – கமல் ஹாசன்.

சனாதனத்தின் ஆணிவேரை அசைத்த சமூகநீதி தமிழ்மண்ணில் முளைத்த நாள். மூடநம்பிக்கைகளின் மூலத்தை எரித்த பகுத்தறிவுக் கனல் ஊழித்தீயாய் உருவெடுத்தநாள். வெல்லும் பெரியாரியம். வெளுக்கும் கீழ்வானம். – திருமாவளவன்,.

தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார்.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளர், சமூக நீதிக்காக சளைக்காமல் உழைத்த போராளி, பெண்ணுரிமைக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த பெருந்தகையாளர், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் அடையாளம் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று! – டிடிவி.தினகரன்.


Share this:

Related posts

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

MANIMARAN M

“இந்திய மாணவர்களின் எதிர்காலம் இனி வெளிச்சமாகும்”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

காய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண் மசோதாவிற்கு வேறமாதிரியான போராட்டம்..!!

MANIMARAN M

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA

ரேசன் கடை மண்ணெண்ணெய் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!

MANIMARAN M

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்?… தொடரும் நீட் தேர்வு தற்கொலையால் தலைவர்கள் கொந்தளிப்பு…!!

AMARA