Newskadai.com
தமிழ்நாடு

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

police
Share this:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி துரை முத்து போலீஸ் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் காவலர் சுப்ரமணியன் ரவுடிகளின் நாட்டு வெடிகுண்டுகள் தாக்குதலுக்கு பலியானர். சுப்ரமணியன் குடும்பதாருக்கு காவல்துறை சார்பில் நிதியுதவி வழங்க காவல் துறையினருக்கு ஐஜி முருகன் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப நிதியுதவி செய்தனர்.
police
அந்த குடும்பத்திற்கு உதவும் வகையில் தென் மண்டல காவல்துறை சார்பாக ரூ.86.50 லட்சம் நிதி திரட்டியதை அடுத்து ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளை கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணியனின் வீட்டிற்கு நேரில் சென்று ஐஜி முருகன் நிதியுதவியை இன்று வழங்கினார். அப்போது திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
police
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐஜி முருகன் தென்மண்டல காவல் துறையினர் சார்பில் மொத்தம் ரூ. 86.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு மாதம் ரூ. 42,420 வட்டி கிடைக்கும். மேலும் அந்தந்த மாவட்டத்தில் ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருக்கும் அந்த சூழ்நிலைக்கு  ஏற்றவாறு சமூக விரோதிகள், மற்றும் ரவுடிகள் மீது  காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஐஜி தெரிவித்தார்.

Share this:

Related posts

தாய்மார்களே உஷார்: கோவையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி…!!

MANIMARAN M

இனி டிராபிக் போலீசைப் பார்த்து பயப்பட வேண்டாம்… போனைக் காட்டிட்டு போய்ட்டே இருங்க…!!

THAVAMANI NATARAJAN

நாகையில் மகளிர் குழுக்களுக்கு மிரட்டல் விடுக்கும் கடன் நிறுவனங்கள்… நடவடிக்கைக்கோரி உதவி கலெக்டரிடம் புகார்…

MANIMARAN M

அக்டோபர் 1-ல் பள்ளிகள் திறப்பு இல்லை : முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

MANIMARAN M

தமிழக சாலைகளில் திடீர் மாற்றம்… விபத்துக்களை குறைக்க புதிய யுக்தி…!!

THAVAMANI NATARAJAN

பிரதமர் மோடி ஆஹா…ஓஹோ.. என பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர்… கந்துவட்டி புகாரில் தலைமறைவு…!!

MANIMARAN M