Newskadai.com
தமிழ்நாடு

கோவில் உண்டியல் பத்தாதுன்னு… ஏடிஎம்-ல் கை வைத்த வாலிபர் கைது.!!

Share this:

மது அருந்துவதை கௌரவமாக நினைத்தே இளைஞர்கள் பலர் குடிப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். அவற்றில் சிலர் மதுவிற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை சீரளித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் சென்னையை சேர்ந்த இளைஞர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கோயில் உண்டியல்களை திருடி தனது தேவையை பூர்த்தி செய்து வந்துள்ளார். திருடிய பணம் போதாத நிலையில் மேலும் திருட ஏடிஎம்-ல் கைவரிசையை காட்டியபோது போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். சென்னையை அடுத்து பெருங்குடி ஏலீம் நகரில் கடந்த 10 ம் தேதி நாகாத்தம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது.

ATM Robberyமேலும் படிக்க: http://பழனியில் நடந்த துப்பாக்கி சூடு..!!! சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி..!!!

கடந்த 12 ம் தேதி பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலும் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 15 ம் தேதி பெருங்குடி அம்மன் கோவிலும் இதே சம்பவம் நடந்தேறியுள்ளது.  இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 16 ம் தேதி கந்தன்சாவடியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் வங்கியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதன் மூலம் கோயிலில் திருடியவரும், ஏடிஎம்-ல் திருடியவரும் துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவரே என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில் “எனது பணத்தேவைக்காக கோவில் உண்டியல்களை உடைத்து திருடியதாகவும், கோயிலில் பணம் அதிகம் இல்லாததால், ஏடிஎம்-ல் திருடினால் பணம் அதிகம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சித்தேன். ஏடிஎம்-யை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டேன்” என்று கூறினார். இது குறித்து வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Share this:

Related posts

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

THAVAMANI NATARAJAN

நாகையில் கோவில், குளம், பள்ளிகளை காலி செய்யப்போகும் சாலைப்பணி… ஆட்சியரிடம் மன்றாடிய மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

#CORONAVIRUS : ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் பாதிப்பு, பலி எண்ணிக்கை நிலை..!!

NEWSKADAI

கேன்சரால் மனைவி மரணம்… துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கி கணவர் தற்கொலை…!

MANIMARAN M

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA