Newskadai.com
இந்தியா

ஜேஎன்யு வன்முறை : போலீசார் மீது எந்த தவறும் இல்லை… விசாரணைக் குழு அறிக்கை…

JNU violence
Share this:

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே புகுந்தனர். அவர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் ஆகியோரை கட்டை மற்றும் இரும்பு ராடுகளால் கடுமையாக தாக்கினர். இதில் மாணவர்கள் பெரிதும் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

வன்முறை சம்பவம் நடந்த போது போலீஸார் உள்ளே சென்று தடுக்காமல் ஏன் வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள்? இந்த சம்பவத்திற்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களை பிடிக்க உள்ளே புகுந்த போலீஸார் அங்கு நூலகத்தில் இருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். அவ்வாறிருக்கையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே மட்டும் போகாதது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. 

JNU violence

மேலும் படிக்க : 21, 22-ஆம் தேதிகளில் மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உதவியாளர் பணிக்கான தேர்வு…

இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க இணை ஆணையர் ஷாலினி சிங், தலைமையில் போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், 4 இன்ஸ்பெக்டர்கள், இரு உதவி ஆணையர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் பல்கலைக்கழக 100 மீட்டருக்குள்பட்ட இடத்தில் தர்னா போராட்டம் நடத்தக் கூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர். அவர்களிடம் ஆயுதங்களோ லத்தியோ இல்லை. எனவே இந்த வன்முறைச் சம்பவத்தில் போலீஸார் மீது எந்த தவறும் இல்லை என உண்மை கண்டறியும் குழு சான்றிதழ் அளித்துள்ளது.


Share this:

Related posts

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

MANIMARAN M

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

நெட்வொர்க் இல்லாததால் கேள்விக்குறியான கல்வி… மகளுக்காக மலைமேல் பெற்றோர் செய்த சிறப்பு ஏற்பாடு…!!

MANIMARAN M

இந்தியாவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்… அரசு அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

“அப்படி மட்டும் நினைக்காதீங்க”… கொரோனா விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பிரதமர் கொடுத்த அறிவுரை…!

MANIMARAN M

கேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN