Newskadai.com
தமிழ்நாடு

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

Share this:

பாஜகவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியே பிரபலமடைந்தவர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் எஸ்.வி.சேகர். ட்விட்டரில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் கைது நடவடிக்கைக்கு பயந்து ஓடி ஒளிந்தவர், அதன் பின்னரும் திருந்தியதாக தெரியவில்லை. சமீபத்தில் தனது யூ-டியூப் சேனலில் தேசிய கொடி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், தேசிய கொடியின் நிறங்கள் குறித்தும் அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து தேசிய கொடியை அவமதித்ததாகவும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாகவும் எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் படி இன்று எஸ்.வி.சேகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.


Share this:

Related posts

இந்தி திணிப்பு, முல்லை பெரியார்… முக்கிய பரிந்துரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்…!!

MANIMARAN M

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

இன்று +1 விடைத்தாள் நகல் வெளியீடு… பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

கறி விருந்து: ஜலகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி?

NEWSKADAI

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்தில் சிகிச்சை – கோவையில் புதிய முயற்சி

MANIMARAN M