Newskadai.com
அரசியல்

என் தளபதியை இழந்து விட்டேனே… பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர்…!

Dr Ramadoss
Share this:

பிரபல தொழிலதிபரும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் 40 ஆண்டு கால நண்பரும், இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் துணை நின்றவருமான டெல்டா நாராயணசாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மிகவும் உருக்கமாக இரங்கல் பதிவிட்டுள்ளார்.

எனது அரசியல் மற்றும் சமூகநீதி பயணத்தில் மறக்க முடியாத மனிதர் டெல்டா நாராயணசாமி. எனது வாழ்க்கையின் அனைத்து வெற்றி & தோல்விகள், சுக துக்கங்களிலும் எனக்கு துணை நின்றவர். என்னைப் போலவே எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு பொறியாளராக உருவானவர்; கடுமையான உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்தவர்.

40 ஆண்டுகளுக்கு முன் சமூக நற்பணி மன்றத்தில் எங்கள் நட்பு துளிர்த்தது; வன்னியர் சங்க காலத்தில் வளர்ந்தது; பின்னர் அசைக்க முடியாத ஆலமரமாக விழுது விட்டு நிலைத்தது. தூய நட்புக்கு சொந்தக்காரரான டெல்டா நாராயண சாமியின் மறைவுச் செய்தியை என்னால் தாங்க முடியவில்லை. எனது கண்கள் குளமாகி விட்டன.

Dr Ramadoos Thalapathi

என் மீதும், சமுதாயத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் போது எனது தளபதியாக விளங்கியவர். இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டித் தரும் குழுவின் உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டவர்.

1989&ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு குறித்து அப்போதைய முதலமைச்சர் கலைஞருடன் பேசுவதற்காக சென்னையில் உள்ள டெல்டா நாராயணசாமியின் வீட்டில் இருந்து தான் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னை அழைத்துச் சென்றார். அதன்பின் பாட்டாளி மக்கள் கட்சிக்காக தொடங்கப்பட்ட தினப்புரட்சி நாளிதழின் மேலாண் இயக்குனராக அவர் சிறப்பாக செயல்பட்டார். இந்த நிகழ்வுகளை நினைக்கும் போதெல்லாம் எங்கள் நட்பின் ஆழத்தையும், வலிமையையும் உணர முடியும்.

எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவே டெல்டா நாராயணசாமி திகழ்ந்தார். சென்னைக்கு நான் வரும்போதெல்லாம் அவரை சந்திக்காமல் சென்றதில்லை. அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், சமூகத்திற்கும் பேரிழப்பு ஆகும். இந்த சோகத்திலிருந்து என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன். ஆனாலும், டெல்டா நாராயணசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

மத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழுத்தம்…!

NEWSKADAI

கை விரித்த பாஜக… மீண்டும் திமுகவிற்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ…!

NEWSKADAI

இனி இவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்வு… மு.க.ஸ்டாலின் அதிரடி…!

AMARA

அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் : தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

MANIMARAN M

இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

AMARA

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். – மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்.

NEWSKADAI