Newskadai.com
அரசியல்

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

Share this:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய கல்வி கொள்கைக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து தேசிய கல்வி கொள்கையை மாற்றி அமைக்கும் பொருட்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தில் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம். மற்றும் கல்லூரி சேர்வதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், எம்.ஃபில். படிப்பு நிறுத்தம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

உயர் கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கும் நிகழ்ச்சியை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் மற்றும் பல்கலைக் கழக மானிய குழு ஏற்பாடு செய்துள்ளது. இன்று “தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு” என்ற தலைப்பில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இடம்பெற்ற வல்லுநர்கள், கல்வியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டை தொடங்கிவைத்த பிரதமர் மோடி அவர்களின் உரை… 

  • 21 ஆம் ஆண்டின் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை.பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

  • புதிய கல்விக் கொள்கை முறையை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்புகளின் கருத்தை கேட்ட பிறகே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    இந்திய கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம்.


  • ஏற்ற தாழ்வுகளற்ற கல்வி வழங்குவதை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

  • பழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதனால் மாணவர்களின் சுமை அதிகரித்தது

  • வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டும்

  • கல்வி கொள்கை மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதற்கு தயாராக வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 


Share this:

Related posts

நீட் தேர்வை நடத்த முடியாதுன்னு அறிவீங்க… அடுத்தடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்…!!

AMARA

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

மாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…!!

AMARA

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…!

AMARA

தமிழகத்தை வஞ்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நியாயமற்ற கடன் கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு… பிரதமருக்கு கடிதம்…!!

MANIMARAN M