பாலிவுட்டின் அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சி மரணங்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்து வருகிறது. அதுவும் இன்று இந்தியாவின் பழம் பெரும் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 1930ம் ஆண்டு ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் பிறந்தவர் பண்டிட் ஜஸ்ராஜ். தற்போது 90 வயதாகும் இவர் அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை 5.15 மணி அளவில் மாரணமடைந் தார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையை இசைக்காக அர்பணித்தவர். உலகம் முழுவதும் பல நாடுகளை அரங்கேற்றியுள்ளார். இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இசையும் கற்றுக்கொடுத்துள்ளார்.
பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பண்டிட் ஜஸ்ராஜின் மறைவு நாட்டி கலாச்சாரத் துறையில் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பாடகர்களுக்கு இவர் வழிகாட்டியாகவும், அடையாளமாகவும் விளக்கியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.