Newskadai.com
இந்தியா

29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கால் வைத்தார் பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் இந்துக்கள்…!!

Share this:

ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் லக்னோ வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தி வந்தடைந்தார். வேஷ்டி, தங்க நிற குர்தாவில் அயோத்தி சென்றடைந்த பிரதமர் மோடியை உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி அயோத்தியில் விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார்.

29 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதன் முறையாக பிரதமர் மோடி அயோத்திக்கு வருகை தருவதாக உத்தரப்பிரதேச அரசு தெரித்துள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகத் உட்பட 170 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

 

பிரதமர் மோடியின் வருகையை அடுத்து அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. பிரதமர் உட்பட விழாவில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • பூமி பூஜைக்காக 2,000 ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீர் பயன்படுத்தப்படுகிறது.

  • பிரதமர் அனுமான் கர்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு பிறகு ராமஜென்ம பூமிக்கு வருகிறார்.

  • 40 கிலோ வெள்ளி செங்கல்லால் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

  • ராமர் கோவிலின் பூஜை 12.30 க்கு தொடங்கவுள்ளது. இந்த பூஜையில் பிரதமர் 12.40க்கு அடிக்கல் நாட்டியதும் 2 மணி வரை நடக்கும் பூஜையில் கலந்து கொள்வார்.

  • ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்துள்ள போடி அவர்களின் பாதுகாப்புக்காக அந்த நகரம் முழுவதும் கடினமான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

  • ராமர் கோவில் கட்டுவதற்கு மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளனர்.

  • ராமர் கோவிலின் கட்டமைப்பு பணியானது 10 ஏக்கரில் கோயிலும், மீதி 57 ஏக்கர் நிலப்பரப்பும் வளாகமாக கட்டப்படவுள்ளது.

  • கோவிலின் உயரம் 161 அடியும், 5 மண்டபங்கள், மூன்றடுக்கு, ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது.


Share this:

Related posts

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M

ரூ.1 கோடி நிதியுதவி… கொரோனாவல் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு முதல்வர் நிவாரணம்….

MANIMARAN M

ஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக சுற்றுலா… ஏழை தாயின் ஆசையை நிறைவேற்றிய அன்பு மகன்..!!

THAVAMANI NATARAJAN

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!!

MANIMARAN M

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

AMARA

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI