Newskadai.com
இந்தியா

கொரோனா நேரத்தில் கோலாகலமாக நடக்கப்போகும் அயோத்தி பூமி பூஜை…!

Share this:

ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் முன்னிலையில் பூமி பூஜை நடத்த உள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது, இந்நிலையில்  உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி சென்று ராமரை வழிபட்டுள்ளார்.

 

இதை தொடர்ந்து அறக்கட்டளை குழுவிடம் ராமர் கோவில் பூமி பூஜை பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சிரிக்கை பற்றி கேட்டறிந்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ள பூமி பூகையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில் பல மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கு பெற உள்ளதாக கூறப்படுகிறது.

Ayodhya

தீபாவளி பண்டிகையைப் போல பூமி பூஜையை மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகள் ஏற்றி நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் பூமி பூஜையை ஒளிர்விக்க இருப்பதாக அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விழாவை தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கும்.


Share this:

Related posts

மீண்டும் உடல் நலக்குறைவு… உள்துறை அமைச்சர் அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

MANIMARAN M

கொரோனா வரமா?… சாபமா…? கொடிய தொற்றிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன?

NEWSKADAI

நீட் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்: தேசிய திறனாய்வு மையம் அறிவிப்பு

THAVAMANI NATARAJAN

பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு தடை… மத்திய அரசு அதிரடி…!!

MANIMARAN M

பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

NEWSKADAI

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI