உத்தரப்பிரதேசம் அயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி அவர்கள் புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் லக்னோ செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தி சென்றடைகிறார். வேஷ்டி, தங்க நிற குர்தாவில் மாஸாக கிளம்பிய பிரதமர் மோடியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகத் உட்பட 170 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
- பூமி பூஜைக்காக 2,000 ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீர் பயன்படுத்தப்படுகிறது.
- பிரதமர் அனுமான் கர்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு பிறகு ராமஜென்மபூமிக்கு வருகிறார்
.
- 40 கிலோ வெள்ளி செங்கல்லால் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
- ராமர் கோவிலின் பூஜை 12.30 க்கு தொடங்கவுள்ளது. இந்த பூஜையில் பிரதமர் 12.40க்கு அடிக்கல் நாட்டியதும் 2 மணி வரை நடக்கும் பூஜையில் கலந்து கொள்வார். ராமர் கோவில் கட்டுவதற்கு மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளனர்.
- ராமர் கோவிலின் கட்டமைப்பு பணியானது 10 ஏக்கரில் கோயிலும், மீதி 57 ஏக்கர் நிலப்பரப்பும் வளாகமாக கட்டப்படவுள்ளது.
- கோவிலின் உயரம் 161 அடியும், 5 மண்டபங்கள், மூன்றடுக்கு, ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது.