Newskadai.com
இந்தியா

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

Share this:

இந்தியாவின் நிலத்தை பிடிக்கவும், உள்நாட்டு குழப்பத்திலிருந்து திசைதிருப்பவும், மோசமான திட்டங்களுடன் பாகிஸ்தான் கார்கில் போரை துவக்கியது. அந்த போரில் இந்திய வீரர்களின் திறமையையும், வீரத்தையும் ஒட்டு மொத்த உலகமுமே பார்த்தது.

நமது இராணுவம் கார்கில் போரில் வெற்றிப் பெற்று 21 ஆண்டுகளுக்கு ஆகின்றது. கார்கில் வெற்றிக்காக போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய மக்கள் சமூக வளைத்தளங்களிலும் கார்கில் வெற்றிக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்று நாட்டு மக்களிடையே “மன் கீ பாத்” நிகழ்ச்சி மூலம் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார்.

நம்முடைய ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். நாட்டிற்கு எதிரான விஷயங்களை, சமூக வலைதளங்களில் பரப்பும் தவறை எவரும் செய்யக்கூடாது. நாடு ஒற்றுமையாக இருக்க அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Rahul

கொரோனா நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆளும் பாஜக அரசு குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசின் சாதனைகள் என நமஸ்தே டிரம்ப், மத்தியப்பிரதேச அரசு கவிழ்ப்பு, மெழுகுவர்த்தி எந்தியது உள்ளிட்ட சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். அவை சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்து ராகுல் காந்தியை மறைமுகமாக சாடியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து பேசிய மோடி, கொரோனாவிலிருந்து லட்சக்கணக்கான மக்களை நாம் காப்பாற்றி இருக்கிறோம். மற்ற நாடுகளை காட்டிலும் இப்பெருந்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாகவே உள்ளது. இறப்பு எண்ணிக்கையும் மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. இன்னும் கொரோனா அச்சுறுத்தல் முடியவில்லை. நாட்டில் பல பகுதிகளில் வேகமாக இந்நோய் பரவி வருகிறது. இதனால், நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியாததால், மக்கள் எப்பொழுதும் முகக்கவசம் அணிய வேண்டும். அசவுகரியமாக இருந்தாலும், கொரோனாவை தடுக்க கட்டாயம் முகக்கவசம் அவசியம் என்றும் பிரதமர் மோடி மன் கீ பாத் உரையில் தெரிவித்தார்.


Share this:

Related posts

கஞ்சா கிடைக்காத கடுப்பில் போதை ஆசாமி செய்த காரியம்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் மருத்துவருக்கு காத்திருத்த அதிர்ச்சி…!!

NEWSKADAI

கேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் – ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்

AFRIN

அதிதீவிரமடையும் யாஸ் புயல் – 90 ரயில் சேவைகள் ரத்து..!

MANIMARAN M

பெருவெள்ளத்தில் பிறந்த புது உயிர்… தத்தளித்த கர்ப்பிணிக்கு மீட்பு படகில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

NEWSKADAI