Newskadai.com
இந்தியா

உலகின் மிக நீளமான “குகைவழிப் பாதை” : இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

Share this:

கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி வாஜ்பாய் அரசால் துவங்கப்பட்ட உலகில் மிக நீளமான குகைவழிப் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் மணாலி – லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோத்தங் கணவாய்ப் பகுதியில் இந்த குகைவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயினால் துவங்கப்பட்டதின் நினைவாக இந்த குகைவழிப் பாதைக்கு  “அடல்” குகைவழிப்பாதை என மோடி அரசு பெயரிட்டுள்ளது. மணாலி – லே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வந்த இந்த குகைவழிப் பாதை தற்போது நிறைவடைந்துள்ளது.

சுமார் ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகைவழிப் பாதையையும் திறப்பு விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த குகைவழிப் பாதையினால் மணாலி மற்றும் லே இடையே உள்ள 46 கி.மீ தூரமும், நான்கு முதல் ஐந்து மணி பயண நேரமும் குறையும். பத்தாயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான முக்கியத்துவம் வாய்ந்த  இந்த “அடல் குகைவழிப்பாதையை” பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.


Share this:

Related posts

9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்…. காமக்கொடூரர்களுக்கு கிடைத்த மரண தண்டனையை கொண்டாடிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

இன்னும் எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பாரோ?… புது சிக்கலில் முதல்வர்…!!

MANIMARAN M

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M

தானாகவே இயங்கும் வாகனங்கள்… நீடிக்கும் ‘காந்தமலை’ மர்மம்… பின்னணி என்ன?

THAVAMANI NATARAJAN

விஜயராஜே சிந்தியா நினைவாக 100 ரூபாய் நாணயம் : வெளியிட்டார் பிரதமர் மோடி…

MANIMARAN M

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

AMARA