Newskadai.com
இந்தியா

இந்த 7 மாநிலங்களில் கொரோனா இன்னும் தீவிரமடையும்… முதல்வர்களுடன் அவசர ஆலோசனையில் இறங்கிய பிரதமர்…!!

Share this:

அமெரிக்காவில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்து பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் மொத்த பாதிப்பில் 65.5 சதவீதத்தினரையும், 77 சதவீத மரணங்களையும், கொரோனா நோய் சிகிச்சை பெறும் 63 சதவீதத்தினர்களையும் மகாராஷ்ட்ரம், தமிழகம், டெல்லி ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்கள் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குறித்து பிரதமர் மோடி இந்த ஏழு மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Corona virus

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவது குறித்தும் அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் அந்த மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார் என்று குறிப்படப்பட்டுள்ளது.


Share this:

Related posts

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

தடையை மீறி நுழைய முயற்சி… ராகுல் மீது லத்தி அடி, கைது நடவடிக்கை… பரபரப்பில் உ.பி…!

NEWSKADAI

இணையதள குற்றங்கள் 500% அதிகரிப்பு – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அதிர்ச்சித் தகவல்..!!!

MANIMARAN M

ஸ்கூட்டரில் 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஆன்மீக சுற்றுலா… ஏழை தாயின் ஆசையை நிறைவேற்றிய அன்பு மகன்..!!

THAVAMANI NATARAJAN