Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

Share this:

மத்திய அரசு சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் கீழ் வழங்கப்பட்டு வரும் இந்த நிதி உதவியில் மோசடி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூ, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியுள்ளதாவது, பிரதமரின் கிசான் திட்டத்தில் பதிவு செய்த தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக பணத்தை மீட்டு, அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 8 ஆயிரத்து 081 தகுதியற்ற பயனாளிகளில், நேற்று வரை 4 ஆயிரத்து 701 பயனாளிகளிடமிருந்து, 1 கோடியே, 76 லட்சத்து, 69 ஆயிரம் மீட்கப்பட்டு அரசு வங்கி கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 3 ஆயிரத்து 380 பயனாளிகளிடமிருந்து உரிய பணத்தை வருவாய், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் வசூலித்து, அரசுக்கணக்கில் செலுத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவர்களை தவறுதலாக சேர்த்த கணினி மைய உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது, உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த முறைகேடுகள் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.


Share this:

Related posts

பற்றி எரிந்த சந்தேக‘தீ’… மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற ‘சைக்கோ’ கணவன்… கதவை உடைத்து காப்பாற்றிய காவலர்கள்…!!

THAVAMANI NATARAJAN

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

THAVAMANI NATARAJAN

செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு… எவற்றுக்கெல்லாம் தடை தொடருகிறது தெரியுமா??

AMARA

மறைந்தது வசந்தம்… சொந்த ஊர் நோக்கி புறப்பட்டது வசந்தகுமார் உடல்…!!

NEWSKADAI

இவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுங்கள்… சட்டமன்றத்தில் அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M