Newskadai.com
இந்தியா

அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…!!

Ayodhya
Share this:

ராமர் பிறந்த இடமான உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் கோவில்  கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

 

கோவிலை சிறப்பாக கட்டிமுடிப்பதற்கு வரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 சாமியார்கள் நேற்று காலை முதலே கவுரி விநாயகர் பூஜையுடன் மிகவும் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளனர்.

 

ராமர் கோவிலை கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து  நாளை பகல் 12 மணியளவில் ராமர் கோவிலுக்கு நடைபெற உள்ள விராஜ்மன் என்ற குழந்தை ராமர் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அங்கு பாரிஜாதம் மரக்கன்று ஒன்றை நட உள்ள பிரதமர், 12.30 மணி அளவில் விழா நடைபெற உள்ள இடத்திற்கு சென்றடைகிறார். வரலாறு காணாத வகையில் சிறப்பாக நடைபெற உள்ள அயோத்தி விழாவிற்கு பிரதமர் மோடி 3 மணி நேரம் ஒதுக்கியுள்ளார்.

 

Modi

உத்தரப்பிரதேச அரசு கொரோனா மற்றும் சமூக விரோத செயல்கள் போன்ற எந்த தடைகளும் குறுக்கிடாமல் விழாவை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உடன் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


Share this:

Related posts

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்கள்… ராகுல் காந்தியை மறைமுகமாக எச்சரித்த பிரதமர்…!

NEWSKADAI

இரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..ஒருவர் பலி…! மூவர் படுகாயம்…!

MANIMARAN M

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

AMARA

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI