Newskadai.com
தமிழ்நாடு

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

PM Kissan
Share this:

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இதுவரை ஐந்து தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்தில்  பயனடையாத சுமார் 70 லட்சம் விவசாயிகள் இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில் இத்திட்டதை பயன்படுத்தி போலியான நபர்கள் பண மோசடி செய்த விவகாரம் பேரதிர்சியை தந்துள்ளது.

PM Kissan

விவசாசிகளின் நலன்கருதியும் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும் பாரத பிரதமரின் கிசான் சம்மான் விவசாய நிதி உதவி திட்டத்தை துவங்கி  தகுதியான விவசாயிகளுக்கு  ஆண்டு தோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியில்லாத நபர்களை விவசாயிகள் என்று பதிவு செய்து முறைகேடு நடந்துள்ளது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் மட்டும் 80,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதைதொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி  தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலியாக பிரதமரின் விவசாய திட்டத்தில்  சேர்க்கப்பட்ட சுமார் 40,000  விவசாயிகள் அல்லாதா போலி  நபர்கள் என முதல் கட்டமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கப்பட்டுள்ளது.

PM Kissan

இதைதொடர்ந்து போலியாக சேர்க்கப்பட்ட நபர்களின் கணக்குகளில் பிரதமரின் விவசாய திட்டத்தின் மூலம் வந்த பணத்தை எடுக்கப்படாமல் இருந்தால் அந்தத் தொகையினை கலெக்டரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு வருகிறது. பணம்  எடுத்தவர்களிடமும் எடுக்கப்பட்ட தொகையை வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நிதி உதவி திட்டத்தில் போலியாக சேர்க்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40,000 பேரின் வங்கிக் கணக்கில்  இருந்து சுமார் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல கடலூர் மாவட்ட விவசாயிகள் என்று சேர்க்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கடலூர் மாவட்ட ஆட்சியரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த முறைகேடுக்கு துனைபோன 10 திட்டப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது.

Agri

இது போன்ற போலியான நபர்களும் திட்ட பணியாளர்களும் செய்யும் தவரால் கடுமையாக உழைக்கும் விவசிகளுக்கென அரசு ஒதுக்கப்படும் உதவகள் சென்றடையாமலே போகிறது.


Share this:

Related posts

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா … ராஜ்பவனிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்…!!

AMARA

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

MANIMARAN M

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

கொட்டித் தீர்க்கும் பருவ மழை… விவசாயிக்கு சாதகமா…? பாதகமா…?

THAVAMANI NATARAJAN

பிரதமர் திட்டத்திலேயே கை வைப்பீங்களா?… கொதித்தெழுந்த எல்.முருகன்… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

MANIMARAN M

சாத்தான்குளத்தில் மீண்டும் ஒரு கொலை… காவல் ஆய்வாளர் மீது வழக்கு..

THAVAMANI NATARAJAN