கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்க்காக நிதி திரட்டும் வகையில் பி.எம் கேர்ஸ் துவங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தேவையான நிதியுதவி செய்ய விரும்புபவர்கள் இந்த பி.எம் கேர்ஸ் ல் பங்களிக்கலாம் என்று தெரிவித்து. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள, பேரிடர் நிவாரணங்களுக்கு பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கும் போது ஏன் புதிதாக பி.எம் கேர்ஸ் எதற்குகாக என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த பி.எம் கேர்ஸில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவே பி.எம் கேர்ஸின் நிதியை பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், பி.எம் கேர்ஸ் பற்றி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மார்ச் 26 ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 3,076 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது என்று பி.எம் கேர்ஸ் நிதியின் ஆடிட்டர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். அனைத்து தொண்டு நிருவனங்கள் மற்றும் சேவை அமைப்புகள் தங்கள் அமைப்புகளுக்கு அளவுக்கு அதிகமான நிதியை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு கடமைப்பட்டுள்ளது.
The auditors of PM CARES FUND have confirmed that the Fund received Rs 3076 crore in just 5 days between March 26 and 31, 2020.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 2, 2020
ஆனால் பி.எம் கேர்ஸ் ல் நிதி வழங்கியவர்களின் பெயர்கள் ஏன் வெளியிடப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார், பி.எம் கேர் நிதி வழங்கியவர்களின் பெயரை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டது? பணத்தைப் பெற்றவர்களுக்குத் தெரியும். எதனால், பணம் வழங்கியவர்களின் பெயரை வெளியிடுவதற்கு பி.எம் கேர் பயப்படுகிறது?’ என அதில் கூறியுள்ளார்.