தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +1 தேர்வு பொது தேர்வை 8 லட்சம் மாணவர்கள் எழுதினர், இதன் தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியானது, இதில் 96.04 சதவீத மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதை தொடர்ந்து விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று 26.08.2020 வெளியிடுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது.
- +1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் 26.08.2020 பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பித்த மாணவர்கள் https://dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
- மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.