விஷம் தன்மை கொண்ட உயிரினங்களாக இருப்பின் அதை கண்டு நாம் பயந்து கொள்வது இயல்பு. ஆனால் வெளிநாடுகளில் அதிகமாக செல்லப்பிராணிகளாக காட்டு விளங்குகளான முயல், சிங்கம், பாம்பு போன்றவற்றை வளர்த்தி வருகிறார்கள். அந்த வகையில் எகிப்தில் பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டு, பாலைவனத்தில் தேள்களைப் பிடிக்க துவங்கிய இளங்களை மாணவர், தனது 25 வயதில் மருந்து நிறுவனத்தின் அதிபரானார்.
தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளுக்கு மேலை நாடுகளில் அதிக மவுசுள்ளதை அறிந்த முகமது ஹம்தி போஷ்டா (mohamed hamdy boshta) பாலைவனங்களில் தேள்களைப் பிடித்து, பின்னர் அவற்றின் விஷத்தை சேகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளார். தனது பண்ணைகளில் 80,000 தேள்களைப் பராமரிக்கும் அவர், 1 கிராம் விஷம் 7 லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனை படிக்கவும்: #BREAKING சித்ரா மரணம்: சற்று முன் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில்‘பகீர்’ தகவல்…!