Newskadai.com
தமிழ்நாடு

கொரோனாவில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு… அரசுக்கு அதிரடி கோரிக்கையுடன் வழக்கு

Private hospitals
Share this:

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கொரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Private hospitals

ரெம்டெசிவர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில், நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

MANIMARAN M

அடிதூள்… நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசுக்கு கடிதம்…!!

MANIMARAN M

ஜூன் 14வரை எவற்றுக்கெல்லாம் தடை நீடிக்கும்… தமிழக அரசின் அறிவிப்பு இதோ…!

NEWSKADAI

கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு குட்நியூஸ்… தமிழக அரசின் அசத்தல் அனுமதி…!

NEWSKADAI

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

MANIMARAN M