Newskadai.com
இந்தியா

வாகன ஓட்டிகளே உஷார்: பெட்ரோல் பங்குகளில் இப்படியும் நூதன முறையில் மோசடி…!!

Share this:

பெட்ரோல் பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கு 50 முதல் 70 மில்லி லிட்டர வரை குறைத்து அளவிடும் வகையில் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி நூதன முறையில் மோசடி செய்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் இந்த மோசடி நடந்துள்ளன. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் விநியோகத்தில் மோசடி நடைபெறுவதாக வந்த புகார்களையடுத்து மாவட்ட போலீஸார் அந்த பங்க்குகளில் சோதனை மேற்கொண்டனர்.

 

மேலும் படிக்க: http://டிஸ்லைக்குகளை குவிக்கும் பிரதமரின் வீடியோக்கள்… அழுகுனி ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக…!!

இந்த அதிரடி சோதனையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படும் இயந்திரத்தில் எலக்ட்ரானிக் ‘சிப்’பை பொருத்தி மோசடி செய்தது கண்டுபிடிக்கபட்டது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு 50 முதல் 70 மி.லிட்டர் வரை குறைத்து விநியோகிக்கப்பட்டதும், வாடிக்கையாளர் பார்வைக்கு அந்த இயந்திரம் ஒரு லிட்டர் என்றே காண்பிக்கும்படி எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டுள்ளதும் சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், சைபராபாத்தைச் சேர்ந்த முகமது என்பவர் 60 ஆயிரம் ரூபாய்க்கு இந்த சிப்பை தந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முகமது தொடர்பாக சைபராபாத் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று சைபராபாத் காவல்துறை ஆணையர் சைபராபாத் முழுவதும் உள்ள பங்க்குகளில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்பேரில் நடந்த சோதனையில் சைபராபாத்தில் 13 பெட்ரோல் பங்க்குகளில் இதுபோன்று ‘சிப்’கள் பொருத்தி மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த 13 பங்க்குகளுக்கும் காவல்துறையினர் ‘சீல்’ வைத்தனர். இதில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான முகமது தலைமறைவாகி உள்ளதால் அவரைதேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் படிக்க: http://அய்யா… குளத்த காணோம்யா…குளத்த காணோம்… கண்டுபிடிச்சிக் குடுங்கய்யா…

மேலும் ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஆந்திராவில் 26 பங்க்குகளும், தெலுங்கானாவில் 13 பங்க்குகளும் சீல் வைக்கப்பட்டு இதில் தொடர்புடைய 33 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

சினிமா தாதாக்களை மிஞ்சும் ’தங்க கொரோனா மாஸ்க்’ தாதா…

NEWSKADAI

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M

குட் நியூஸ் : ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி…

MANIMARAN M

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்… 8 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI