Newskadai.com
தமிழ்நாடு

முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… கருணாஸ் மீது பரபரப்பு புகார்…!!

Petrol Bomb
Share this:

நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை தொடங்கிய போது அதில் பொதுச்செயலாளராக இருந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை. இவருடைய உழைப்பால் தான் 2016ம் ஆண்டு நடந்த திருவாடானை தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த ஆண்டே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸை நீக்குவதாக பாண்டித்துரை அறிவித்தார்.

Karunas

அதன் பின்னர் முரண் தொடர்ந்து வந்த நிலையில், பாண்டித்துரை கட்சியிலிருந்து விலகினார். தற்போது முக்குலத்தேவர் புலிப்படை என்ற அமைப்பை உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று பாண்டித்துரை வேலை சம்பந்தமாக மதுரை சென்றுள்ளார், இதை பயன்படுத்தி கொண்டு இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணிக்கு பெட்ரோல் குண்டை  வீசியுள்ளனர்.  ஆனால் அந்த குண்டு வீட்டின் கேட் மீது பட்டு வெளியே விழுந்து வெடித்துள்ளது.

Karunas

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அங்கு சாலையில்  நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வேன் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்த போதுதான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மதுரை சென்ற பாண்டித்துரைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வீட்டுக்கு விரைந்த பாண்டித்துரை பரமக்குடி காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார்.

Petrol Bomb
இச்சம்பவத்திற்கு முன்பு கருணாஸ் குறித்தும் அவர் நடத்திவரும் அமைப்பு குறித்தும் பாண்டித்துரை அவ்வப்போது விமர்சனம் செய்துவந்துள்ளார். இதனால் கருணாஸ் ஆதரவாளர்களால் பாண்டித்துரைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது உயிருக்கு கருணாஸ் மற்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேதுபதி ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு கேட்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாண்டித்துரை சில நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்திருக்கிறார்.
Petrol Bomb
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், கருணாஸிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியும் மனு அளித்துள்ளார். பல்வேறு வழக்குகள் தொடர்பாக சேதுபதியை போலீசார் தேடிவரும் நிலையில் அவர் தலைமறைவாகியிருக்கிறார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள், இதில் பெட்ரோல் நிரப்பட்ட பாட்டில்கள் பாண்டித்துரை வீட்டு முன் வீசப்பட்டிருந்ததுடன், அவர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வேறு நபர்பகளுக்குச் சொந்தமான இரு வாகனங்கள் சேதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் பரமக்குடி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

Related posts

கொரோனா காலத்திலும் குறைவில்லாத சேவை… நாகர்கோவிலில் அசத்தும் ராணுவ வீரர்கள்…!

AMARA

விநாயகர் சதுர்த்தி வழக்கு: தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது… மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!

MANIMARAN M

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M

சீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை… அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்…!!

MANIMARAN M

சேலத்தில் வீடு இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி முதியவர் பரிதாபமாக பலி…!!

THAVAMANI NATARAJAN

கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

MANIMARAN M