Newskadai.com
தமிழ்நாடு

கடவுள் தலையிலேயே கைவச்ச ’ஆசாமி’..!! திடுக்கிட வைத்த ’திருட்டு’

Silver crown stole
Share this:

கொரோனா தொற்று பரவலால் கடந்த சில மாதங்களாக கோவில்கள் திறக்கப்படாத நிலையில் இருந்தது. அந்த காலகட்டத்தில் கோவில் திருட்டுக்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் விடப்பட்ட நிலையில் கோவில்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  சென்னை ஜெயின் கோவிலில் வழிபாடு செய்வதாக நடித்து சாமி சிலையில் உள்ள கிரீடத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றுள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள புருஷாதானி பார்ஷனாத் ஜெயின் கோயிலில் நேற்று முன் தினம் சாமி சிலையின் தலை பகுதியில் இருந்த வெள்ளி கிரீடம் களவாடப்பட்டது தெரியவந்தது.

Theft of 600 grams of silverமேலும் படிக்க: http://உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை…தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரின் தன்னலமற்ற செயல்…

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் செயலாளர் அசோக்குமார் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி கேமராக்களை சோதனை நடத்தினர். அதில் நீல நிற சட்டை அணிந்த மர்ம நபர் கோவிலில் வழிபாடு செய்வது போல நடித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து சாமி சிலையின் காதுகளில் இருந்த வெள்ளி பொருட்களை திருட முயற்ச்சித்துள்ளார் ஆனால் அவற்றை எடுக்க முடியாததால், சாமி சிலையின் தலைப்பகுதியில் உள்ள 600 கிராம் வெள்ளி கிரீடத்தை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதனை கொண்டு மர்ம நபரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.


Share this:

Related posts

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…!!

MANIMARAN M

ஆன்லைன் ஆஃப்பரில்… மொபைலுக்கு பதிலா வந்ததைப் பார்த்து!! ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி..!!

THAVAMANI NATARAJAN

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA