Newskadai.com
தமிழ்நாடு

அடப்பாவிகளா: கொரோனாவை மறந்து குஷியாக ‘குளியல்’… ஏற்காட்டில் அரங்கேறிய அவலம்…!

Yerkadu
Share this:

சேலத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தேன்றிய அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னங்குறிச்சி புது ஏரிக்கு அருகில் உள்ள கோம்பைக்காடு என்ற இடத்தில் தடுப்பனை உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் பெய்த மழைநீர் இந்த தடுப்பனைக்கு வந்து அங்கிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அங்கு குளிப்பதற்காகவும், இயற்கை அழகை ரசிப்பதர்காகவும் மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.

Yerkadu

கடந்த ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் சேலம் கன்னங்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அருவியிலும், தடுப்பணையிலும் ஆனந்தமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள தடுப்பணையில் வாலிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்ததால் பொதுமக்கள் கோம்பைக்காடு பகுதிக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர். இருப்பினும் மக்கள் மாற்று பாதையில் சென்று உல்லாசமாக இருந்துவருகிறார்கள். கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் சமூக இடைவெளியை பின்பற்றுவதை மறந்து மக்கள் உல்லாசமாக குளித்து மகிழ்ந்து  வருவதை குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Share this:

Related posts

கட்டிங்கிற்கு காசு சேர்க்க கூட்டு சேர்ந்த இளைஞர்கள்….. சேலத்தில் ஜோராக நடந்த “குடி”மகன்களின் வியாபாரம்…!

THAVAMANI NATARAJAN

இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தல்… 10 நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியானது அதிர்ச்சி பின்னணி…!!

NEWSKADAI

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை…!! நாமக்கல்லில் திருடர்கள் கைவரிசை..!!

MANIMARAN M

வாழ்த்துக்கள் டீச்சர்: நல்லாசிரியர் விருதினை பெரும் திருப்பூர் மாவட்ட பெண் ஆசிரியர்கள்

MANIMARAN M

இரவோடு இரவாக வீட்டிற்குள் புகுந்த நண்பர்கள்… கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்…!

THAVAMANI NATARAJAN