Newskadai.com
தமிழ்நாடு

கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா… தமிழக அமைச்சர் அதிரடி..!!!

Share this:

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் வெவ்வேறுக்கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு வேட்டி- சேலை வழங்கி அவர்களை வரவேற்ற அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்களிடையே பேசியதாவது,

  • வேதாரண்யம் இன்னும் 6 மாதத்தில் தன்னிறைவு பெற்ற நகராட்சியாக மாறும்.
  • வேதாரண்யம் தேரோடும் நான்கு வீதிகளும் கான்கிரீட் சாலைகளாக அமைய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
  • வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைய முதல் அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார்.
  • மக்கும் குப்பைகளை கொண்டு தயாரிக்கப்படும் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

  • வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு அரசின் சார்பில் அந்த நிலத்தை கையகப்படுத்தி மக்களுக்கு பட்டா வழங்க அரசு தயாராக உள்ளது.
  • கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும்.
  • வேதாமிர்த ஏரி தூர்வாரப்பட்டு நான்கு கரைகளிலும் தடுப்பு சுவர் கட்டி நடைபாதை அமைத்து ஆங்காங்கே பூங்காக்கள் அமைத்து இருக்கைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஓ எஸ் மணியன் கூறினார்.


Share this:

Related posts

இன்னும் இரண்டே நாள்: சான்று பெற்ற பணியாளர்களுக்கு மட்டும் தொடங்குகிறது அதிரடி சேவை…!

MANIMARAN M

ஐசியூ-வில் குதித்தோடும் எலிகள்; கூண்டு வைத்து பிடிக்கும் மருத்துவர்கள்… சேலம் அரசு மருத்துவமனையின் அவல வீடியோ…!

THAVAMANI NATARAJAN

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்குமா இடஒதுக்கீடு?… ஆளுநரால் அந்தரத்தில் தொங்கும் எதிர்காலம்…!

THAVAMANI NATARAJAN

நீட்டினால் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை… திருச்செங்கோடு மாணவனின் பரிதாப முடிவு…!!

AMARA

SBI டெபிட் கார்ட் வச்சியிருந்தால் நீங்களும் அதிர்ஷ்டசாலி தான்… அசத்தல் அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M