Newskadai.com
தமிழ்நாடு

“பரோல் விண்ணப்பங்கள் மீது 2 வாரங்களில் முடிவு”… அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்…!

Share this:

கைதி ஒருவரின் நீதிப் போராட்டம் பிற கைதிகளின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவந்துள்ளது. ராதாகிருஷ்ணன் என்ற ஆயுள் தண்டனை கைதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில் தனக்கு பரோல் வழங்கக்கோரி 2019 செப்டம்பர் முதல் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு செய்தும் இதுவரை பரோல் வழங்கவில்லை என்றும், மனைவியின் மருத்துவ செலவு, மகளின் கல்விச் செலவு இவற்றுக்கு தனது சொத்தை விற்க வேண்டிய அவசியம் இருப்பதால் தனக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் ராதாகிருஷ்ணனுக்கு பத்து நாட்கள் பரோல் வழங்கியதுடன் கீழ்க்கண்ட உத்தரவுகளை அரசுக்கும் சிறைத்துறைக்கும் பிறப்பித்தனர்.

  1. பரோல் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டுமென்றும் பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
  2. குறைந்தபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர்களுக்கே பரோல் என்ற சிறைத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து குறைந்தபட்ச சிறை தண்டனை பெற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே பரோல் பெற சட்டத்திருத்தம் செய்ய அறிவுறுத்தினர்.
  3. பரோலில் வரும் கைதிகளிடம் பணம் பெறக் கூடாது என்பதை சிறைத்துறை ஐஜி உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது சம்பந்தமாக அரசு சட்டம் இயற்றும் வரை இரண்டு வார காலக்கெடுவை சிறைத்துறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூலை 27ம் தேதிக்கு மறு விசாரணைக்கு ஒத்தி வைத்தனர்.


Share this:

Related posts

அவதூறு வீடியோக்களை நீக்க அதிரடி உத்தரவு : மாரிதாஸுக்கு ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!!

NEWSKADAI

தமிழக அரசுக்கு அடுத்த பேரிடி… கொரோனாவால் பல கோடிகளை இழந்த முக்கிய துறை…!!

THAVAMANI NATARAJAN

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M

சேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி தேடும் வனத்துறை…!!

THAVAMANI NATARAJAN

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீப்பந்தம் ஏந்திய மக்கள்… தீவிரமடையும் போராட்ட ‘தீ’!!

POONKUZHALI

பற்றி எரியும் மீனவ கிராமம்… கடலூரில் இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்… வைரல் வீடியோ…!!

NEWSKADAI