Newskadai.com
இந்தியா

தமிழக பதிவு எண் கொண்ட காரில் பாகிஸ்தான் கொடி… கர்நாடக போலீசார் செய்த தரமான சம்பவம்…!!

Share this:

இந்தியா – பாகிஸ்தான் என்றாலே அனைவரின் மனதிலும் ஒரு பதட்டம் வந்து போகும், காரணம் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, இந்திய பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவது என பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும், தீவரவாதிகளும் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வர்த்தகங்கள் தடைப்பட்டது, இதுமட்டுமல்லாது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கூட நடத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் கொடியை காரில் பொருத்திய படி இருவர் கர்நாடகாவில் சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.


கர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியை அடுத்துள்ள வீரசந்திரா பகுதியில் வழக்கம் போல் நேற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ஒரு கார் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு வந்தது. அந்த காரில் பாகிஸ்தான் நாட்டு கொடி முன்பகுதியில் கட்டப்பட்டு இருந்தது. இதை கவனித்த போக்குவரத்து போலீசார் அந்த காரினை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க : http://ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

காரில் இருந்த இருவரிடமும் பாகிஸ்தான் கொடி பொருத்தப்பட்டிருப்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அந்த நபர்கள் சரியாக பதில் கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதையடுத்து இனி இது போல் பாகிஸ்தான் கொடியை கட்டி வரக்கூடாது என எச்சரித்த போலீசார், அந்த கொடியை அகற்றினர்.  பின்பு நமது தேசிய கொடியினை கட்டி அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமான வீடியோக்கள் சமூக வளைதலங்களில் பரவிவருகிறது.


Share this:

Related posts

காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த இந்துக்கள்… மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!

NEWSKADAI

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M

நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-ல் வெளியாகிறது தீர்ப்பு…!!

MANIMARAN M

செப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு?…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…!!

AMARA

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI